இலட்சக்கணக்கான மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய முத்துரமேஷ் நாடார் கோரிக்கை

தமிழகத்தில் ரம்மி,ஒரு நம்பர் லாட்டரி,மூன்று நம்பர் லாட்டரி போன்ற சூதாட்டங்களுக்கு ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தடை செய்துள்ளது.

ஆனால் சில மாதங்களாக மொபைல் பிரிமியர் லீக் என்கின்ற ஆன்லைன் மூலம் ரம்மி மற்றும் 30க்கும் மேற்பட்ட சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த சூதாட்டத்தை அதிக அளவில் விளம்பர படுத்தி வருபவர்கள் பல கோடி மக்களுக்கு பரிச்சியமான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் நடிகை தமன்னா
பணத்திற்காக இவர்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்திருந்தாலும் இவர்களது நடிப்பை உண்மை என நம்பி இந்த சூதாட்டம் மூலம் தினமும் நாம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என நம்பி அதிக அளவில் பெண்கள் கல்லூரி மாணவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை விளையாடி தங்களது பொருளாதாரத்தை மிக பெரிய அளவில் இழந்து வருகிறார்கள். 
பொருளாதாரத்தை இழந்த பலர் மனநலம் பாதிக்கப்பட்டும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தும் தங்களது தொழிலையும் குடும்பத்தை விட்டு ஓடி செல்லக்கூடிய நிலையில் உள்ளனர்.
மூன்று நாள்களுக்கு முன்பு இச் சூதாட்டத்தால் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் தற்கொலை செய்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு சமயத்தில் கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் ஓய்வில் இருப்பதால் முன்பை விட அதிக அளவில் சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்.

எனவே ஆன்லைன் சூதாட்ட அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவி பொதுமக்களை காப்பாற்றிட மொபைல் பிரிமியர் லீக் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களையும் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.

மக்கள் அதிக அளவு ஏமாற காரணமாக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மீதும் சினிமா நடிகை தமன்னா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து இந்த சூதாட்டத்தின் பாதிப்பில் இருந்து இலட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர் உடைமைகளை காப்பாற்றி தருமாறு கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *