மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை திறந்திடவும், நீதிமன்றங்களுக்கு உள்ளே அனுதிக்கவும் ஆர்ப்பாட்டம்

கோவையில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் 40க்கு மேற்பட்டவர்கள் நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட டாக்டர் ரன்பீர் சிங் தலைமையில்  அமைக்கப்பட்ட ஐவர் குழுவினை கலைத்திட வலியுறுத்தி கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களாக மூடியிருக்கும் கீழமை நீதிமன்றங்களை உடனடியாக திறந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *