திருக்கோயில் அர்ச்சர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய EX MLA கே.குப்பன்

திருவொற்றியூர் பகுதியில் உள்ள திருக்கோயில் அர்ச்சர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்

திருவொற்றியூர் :
திருவொற்றியூர் பகுதியிலுள்ள திருவொற்றியூர், தெற்கு மாட வீதியில் உள்ள சங்கராச்சாரியார் காலணியில் உள்ள மண்டபத்தில்
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய ஊரடங்கினால் வேலைவாய்ப்பை இழந்து வாடும் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் திருக்கோயில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள், ஏழை எளிய பிராமண சமுதாயத்தைச் சார்ந்த 100 குடும்பங்களுக்கு,
தலா 5 கிலோ அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்வு
திருவொற்றியூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் அவர்களின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது. இதில்
வருவாய்,பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களும்,
மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்.ஏவுமான வி.அலெக்சாண்டர் அவர்களும் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மனித நேயர் கே.கார்த்திக், இ. வேலாயுதம், புதுகை.மு. பாண்டியன்,ஜி.ரவிக்குமார், எஸ்.மா.அரசு, எம். கண்ணன், எஸ். சங்கர், வி. டி. டி. கணேஷ், டி. ஸ்டீபன்ராஜ், எஸ். குசேலன், விம்கோ.கே.லெனின், எஸ். பி. புகழேந்தி, டி. கல்யாண சுந்தரம், இ. சௌந்தரராஜன், எம். தினகரன், மு. சிவன், சி. பாபு, பி. ஜி. ஆர் தினேஷ்குமார், எஸ். பாலகிருஷ்ணன், வி. மணி, எஸ். தன்ராஜ், கே. வெள்ளைச்சாமி, வி. கருப்புசாமி, பி. ராஜேந்திரன், எஸ். தனசேகரன், எல். ஆனந்தன், இ. மச்சவேல், ராமன், என். ஆர். எஸ். மோகன், பி. சுரேஷ், எம். எஸ். தேவராஜ்,யு. மணிமாறன், அப்பர் நகர். ஆர். லோகு,
தமிழ்நாடு பிராமண சங்க தலைவரும், திருவொற்றியூர் பிராமண சங்க தலைவருமான ஜெயராமன் மற்றும் கழக பகுதி நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *