திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்வி உதவித்தொகை வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா இ.கா.ப  திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் பிள்ளைகள் அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக காவல்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் 53 மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகையை பெற்று பயனடைந்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மாணவ-மாணவிகளிடம் கல்வியில் சிறந்து விளங்கும் படியும், உயர் பதவிகளை பெற்று சாதனை படைக்கும் படியும் அறிவுரை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *