செய்யாறு பகுதியில் 173 மதுபாட்டில்கள், 3லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திய இருவர் கைது.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. அரவிந்த் அவர்களின் உத்தரவுபடி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் தலைமையில், செய்யார் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி.M.மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் இணைந்து நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில்  குவலை  பகுதியில் 180ml கொள்ளளவு கொண்ட 173 மதுபாட்டில்களை ஆட்டோ மூலம் கடத்தி வந்த 1)வினோத், வ/ 36, த/பெ. குண்டன், தண்டலம் கிராமம் மதுராந்தகம் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் என்பவரையும், சுருட்டல் பகுதியில்  03லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்திய 2)ஏழுமலை, வ/45, த/பெ. சுப்பிரமணி, அரக்கோணம், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரையும் செய்யாறு மதுவிலக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 01 மூன்று சக்கர ஆட்டோ, 01 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *