கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிமுகம் செய்யும் ஹோம் கேர் சேவை திட்டங்கள்

அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகள் உள்ள கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிமுகம் செய்யும் ஹோம் கேர் சேவை திட்டங்கள்

● 14 நாட்கள் ஹோம்கேர் (வீட்டிலிருந்தபடியே சிகிச்சை) திட்ட தொகுப்புகள் ரூ 15,000 மற்றும் ரூ 21,000 என்ற கட்டணத்தில் வழங்கப்படுகின்றன

● பெரும்பான்மையான கொரோனா தொற்று நோயாளிகளிடம் எந்த அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை, மிக லேசான அறிகுறிகளே அவர்களுக்கு இருக்கின்றன ஆகையால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டிய தேவையில்லை

மதுரை / 4 ஜுலை, 2020: தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை, கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட அறிகுறிகளே இல்லாத அல்லது லேசான அறிகுறிகளை வெளிப்படுத்துகிற நோயாளிகளுக்காக வீட்டிலிருந்தபடியே பெறும் சிகிச்சை (ஹோம்கேர்) திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. 14 நாட்கள் வழங்கப்படும் இந்த வீட்டிலிருந்தபடியே பெறும் சிகிச்சை திட்டமானது ரூ 15,000 என்ற கட்டணத்தில் ஆரம்பமாகிறது மற்றும் மதுரையில் உள்ள நோயாளிகளுக்கு இச்சேவை கிடைக்கப்பெறுகிறது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருஷங்கர் இது தொடர்பாக பேசுகையில், “பெரும்பான்மையான கோவிட் தொற்று பாசிட்டிவ் நோயாளிகளிடம் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை அல்லது மிக லேசான அறிகுறிகளே அவர்களிடம் காணப்படுகின்றன. வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டல் மற்றும் விதிகள் முறையாக பின்பற்றப்படுமானால் இத்தகைய நோயாளிகள் குணமடைந்து மீள்வதற்கான காலஅளவு இரண்டு வாரங்கள் மட்டுமே. மருத்துவமனைக்கு இவர்களை சிகிச்சைக்காக உடனே அழைத்துச் செல்ல வேண்டியதில்லை. தங்களது வீட்டில் சௌகரியமாக இருந்துகொண்டே தங்களை அவர்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளலாம். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது அவசியப்படாத கோவிட் நோயாளிகளுக்காகவே எங்களது இந்த எளிய கட்டணத்திலான ஹோம்கேர் திட்ட சேவை தொகுப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

மிதமான கட்டணத்தில் இச்சேவை கிடைக்கிறது என்பது மட்டுமில்லாமல், மருத்துவமனைகளில் கோவிட் தொற்று நோயாளிகள் அதிகம் குவிவதையும் இதை தடுக்கும்; இதன் மூலம் அதிதீவிர சிகிச்சை அவசியப்படுகிற நோயாளிகளுக்கு தேவைப்படுகிற படுக்கை வசதிகள் போதுமானளவு கிடைப்பதை இது ஏதுவாக்கும்,” என்று கூறினார்.

வீட்டிலிருந்தபடியே பெறும் சிகிச்சையின் அடிப்படை திட்டத்தின் விலை ரூ 15,000 எனவும் மற்றும் அல்ட்ரா சிகிச்சை திட்டத்தின் விலை ரூ 21,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு சிகிச்சை திட்டங்களிலும் மருத்துவரோடு கலந்தாலோசனை (ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை), பயிற்சி பெற்ற செவிலியரால் தினசரி உடல்நிலை கண்காணிப்பு, உணவுமுறை மற்றும் மனநலவியல் ஆலோசனை, வாராந்திர அளவில் நடைபெறுகிற ஊக்கப்படுத்தும் செயல்பாட்டு நடவடிக்கை, 24×7 கொரோனா தொடர்பு உதவி எண், தொலைதூரத்திலிருந்தே நோயாளியை கண்காணிக்கும் அமைப்புமுறை, டிஜிட்டல் தெர்மாமீட்டர், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள், சானிட்டைஸர் மற்றும் கழிவு அகற்றலுக்கான பைகள் ஆகியவை உள்ளடங்கும். வீட்டிலிருந்தபடியே பெறும் சிகிச்சையின் அடிப்படை திட்டமானது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை கண்காணிப்பதற்கான டிஜிட்டல் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மற்றும் இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி ஆகியவற்றை வழங்கிறது அல்ட்ரா சிகிச்சை திட்டத்தில், மொபைல் செயலி வழியாக மருத்துவமனை பணியாளர்களால் நோயாளியை நிகழ்நேரத்திலேயே கண்காணிப்பதை அனுமதிக்கிற ப்ளுடூத் ஏதுவாக்கப்பட்ட சாதனங்களை வழங்குகிறது.

கூடுதல் தகவல்களுக்கு 77083 53777 என்ற எண்ணை அழைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *