இலவச மற்றும் பிரத்தியேக மூளை மேம்பாட்டு பயிற்சி முகாம்

உலகளாவிய ரீதியில் பெரும்பாலான பெற்றோர்களின் தலையாய சிந்தனை அல்லது கவலை எது என்ற கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் அவர்கள் குழந்தைகளின் கல்வி குறித்த வெற்றி என்று தான் கூற வேண்டும். இளமைப் பருவத்தில் வாழ்வில் சாதனைகள் புரிவதற்கு கல்வியில் பெறும் வெற்றி தான் முதல் படியாகும். பிரகாசமான வேலை வாய்ப்பிற்கான அடித்தளமாகவும் கல்வியில் பெறும் வெற்றியே அமைகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளி அல்லது கல்லூரியில் ஒருவரின் சிறப்பான செயல்பாடு என்பது, அவரின் மூளை எந்த அளவு சிறப்பாக செயல்படுகின்றது என்பதைப் பொறுத்தே இருக்கின்றது. அது இயல்பான நுண்ணறிவு அல்லது இயற்கையாக காணப்படும் என்றும் அழைக்கப்படுகிறது. அடிப்படைக் கல்வியைக் கொண்டவர்கள் எவ்வாறு உயர் சாதனையாளர்களாக மாறி, வல்லமை மிக்க வணிக சாம்ராஜ்யங்களை நிறுவுகிறார்கள் என்பதை இது விளக்குகிறது.

மனித நுண்ணறிவுத்திறன் என்பது ஒற்றை தன்மை கொண்டதன்று. அது பன்முகத் திறன் வாய்ந்தது என்ற கோட்பாட்டை, ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner), தமது ஆய்வின் மூலம் 1983-களில் நிறுவினார். ஆனால் நடைமுறைக் கல்வியாளர்கள் பெரும்பாலும் வாய்மொழி-மொழியியல் மற்றும் தர்க்கரீதியான-கணித நுண்ணறிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள், உடல்-இயக்கவியல் சார்ந்த நுண்ணறிவு, காட்சி புலன் சார்ந்த நுண்ணறிவு, தன்னைத் தானே அறிந்து கொள்ளும் திறன், சக மனிதர்களோடு அளவளாவும் திறன் போன்ற அம்சங்களை புறக்கணிக்கின்றனர். மூளையின் நிஜமான ஆற்றல் முழுமையாகத் தூண்டப்படுவதில்லை என்பதே இதன் பொருள் ஆகும். மூளையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நுண்ணறிவு முழுமையாகப் பயன்படுத்தப்படும்போது, இன்னொரு மனிதரின் நிலையில் தம்மை வைத்துப் பார்க்கும் திறன் மற்றும் சமூக திறன்களைக் கொண்ட ஒரு முழுமையான ஆளுமை மிக்க மனிதராக உருவாக்குகிறது.

அனைத்துப் பகுதி செயல்பாட்டையும் மேம்படுத்தி மாணவர்களின் புத்திசாலித்தனத்தை மேம்படுத்தும் காரணத்தால், ஒலிப்பு நுண்ணறிவை(PI), மாற்றத்தை அளிக்கும் பரிணாம வளர்ச்சி ஊக்கி என்று கூறலாம் என்று டாக்டர் பாஸ்கரன் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். ஒப்புமை கொண்ட பேச்சொலி அல்லது ஒலி அலைகளைப் பயன்படுத்தி மூளையைத் தூண்டும் வகையில் இது செயல்படுகின்றது. அவர், இரண்டு காரணங்களுக்காக இதனை தனித்துவமான
விஞ்ஞானம் என்று அழைக்கிறார். முதலாவதாக இது இயற்கை நுண்ணறிவைத் தூண்டுகிறது. மேலும் இது கல்விப் பயிற்சியால் பெறப்பட்ட நுண்ணறிவையும் மேம்படுத்துகிறது. அவரைப் பொறுத்தவரை, மூளையின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடைய நுண்ணறிவை அதிகரிக்கும் திறன் கொண்ட ஒரே நடைமுறை பயிற்சி இதுதான். ஒருவரின் மூளை சிறப்பாக செயல்படும்போது, அது இயற்கையான நுண்ணறிவு மற்றும் மாணவர் பெறும் கல்வி பயிற்சி இரண்டையும் மேம்படுத்துகிறது. தற்போது உள்ள மூளை அடிப்படையிலான நுண்ணறிவை அளிக்கும் பயிற்சி நிகழ்வு ஒலிப்பு நுண்ணறிவு மட்டுமே என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்.

ஒலிப்பு நுண்ணறிவு (PI) பயிற்சி செய்வது மிகவும் எளிதானது. இதற்கு ஒரு நாளைக்கு 7 நிமிடங்கள் மட்டும் தான் தேவைப்படுகின்றது. கல்வி மற்றும் தொழில்முறை செயல்திறனில் முன்னேற்றத்தின் வடிவத்தில் பயிற்சிக்கான பலன்கள் இரண்டு வாரங்களுக்குள் வெளிப்படும். இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டியுள்ளார்கள். எல்லா வயதினரும் பி.ஐ. பயிற்சியை மேற்கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பயிற்சி சமூக பழக்க வழக்கங்களிலும் நடத்தையிலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது அன்பு, இரக்கம் மற்றும் பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் திறன் போன்ற உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் மிகவும் இணக்கமான நடத்தைக்கு வழிவகுக்கிறது.

டாக்டர் பிள்ளை ஒரு அறிஞர், தயாள குணம் கொண்டவர் மற்றும் உலகளாவிய கல்வியாளர் ஆவார். மக்கள் தங்களின் அதிகபட்ச திறனை உணர உதவுவதே இவரின் லட்சியம் ஆகும். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகத் துறையில் பி.எச்.டி படித்த அவர், மத ஆய்வுகள் துறையில் பயிற்சி ஆய்வாளராகவும், சர்வதேச ஆய்வுத் துறைக்கான இந்திய ஆய்வுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

டாக்டர் பிள்ளை 10-18 வயதுகுட்பட்ட மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இலவச மற்றும் பிரத்தியேக மூளை மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தி வருகிறார். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

https://www.phonemicintelligence.org/pi-opt-in-page-2020/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *